அமீரகத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்


அமீரகத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 19 April 2021 5:14 PM GMT (Updated: 19 April 2021 5:14 PM GMT)

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் இதுவரை இந்த தடுப்பூசியானது 96 லட்சத்து 75 ஆயிரத்து 205 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 100-க்கு 97.82 பேர் என்ற விகிதத்தில் இருந்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story