ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு


ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 8:04 PM GMT (Updated: 19 April 2021 8:04 PM GMT)

ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு.

அபுதாபி,

அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் அபுதாபியின் மதினா மற்றும் அல் வத்பா, அல் அய்னின் அல் மசூதி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்கள் வெள்ளிக்கிழமை தவிர தினமும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்படும்.

அபுதாபியின் அல் பகியா, ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி, அல் சம்கா மற்றும் கடற்கரை பகுதி, அல் அய்னின் கிலி, அசரேஜ் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையங்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பின்னர் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்படும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்படும்.

அபுதாபியின் பழைய மப்ரக் ஆஸ்பத்திரி மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களில் உள்ள பரிசோதனை மையங்கள் வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்படும். மேலும் பிற இடங்களில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையங்களுக்கு செல்பவர்கள் அந்த மையம் செயல்படும் நேரம் குறித்த விவரத்தை தெரிந்து கொண்டு செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story