உலக செய்திகள்

அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன் + "||" + Every American above 16 eligible to get COVID-19 vaccine: Biden

அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜோ பைடன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-   

இன்று முதல் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர். தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது.பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்க்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”என பதிவிட்டுள்ளார். 

அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்
ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229- ஆக உயர்ந்துள்ளது.
3. அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
5. முழு தொகையும் கொடுக்கப்பட்டது; சீரம் நிறுவனத்திடம் 11 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்; சுகாதார அமைச்சகம் தகவல்
3 மாத தேவைக்காக சீரம் நிறுவனத்திடம் 11 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், இதற்காக முழு முன்பணமாக ரூ.1700 கோடிக்கு மேல் கொடுத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.