அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்


அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்
x
தினத்தந்தி 20 April 2021 3:20 AM GMT (Updated: 20 April 2021 3:20 AM GMT)

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி தனது 93-வது வயதில் இன்று காலமானார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 39-வது அதிபராக பதவிவகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 42-வது துணை அதிபராக செயல்பட்டவர் வால்டர் மண்டிலி. 

மேலும், பில் கிளிங்டன் அதிபராக இருந்த போது 1993 முதல் 1996 வரை வால்டர் மண்டிலி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலை விட்டு கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டிலி இன்று உயிரிழந்தார். வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வால்டர் மணிடில் மறைவுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Next Story