உலக செய்திகள்

துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள் + "||" + Photos of a crescent-shaped lake going viral in Dubai

துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள்

துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள்
துபாய் அல் குத்ரா பாலைவன பகுதியில் பிறை வடிவத்தில் ஏரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியை ஆளில்லா குட்டி விமானம் மூலம் துபாயை சேர்ந்த முஸ்தபா என்பவர் முதன் முதலாக படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோவில் பிறை வடிவத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுவதாக அந்த ஏரி அமைந்துள்ளது. அதனை சுற்றி புள்ளிகளாக மரங்கள் தெரிகின்றன.

ஏற்கனவே இந்த பகுதியில் லவ் லேக் என்ற பெயரில் இதய வடிவிலான ஏரி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அல் குத்ரா பகுதியை இயற்கை வன உயிரின பகுதியாக துபாய் அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 200 வகையான பறவையினங்கள் வசித்து வருகின்றன. பறவை ஆர்வலர்களுக்கு இது விருந்தளிக்கக்கூடிய இடமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறை வடிவ ஏரி அருகே அரேபியா ஓரிக்ஸ் மான்களையும் கண்டு ரசிக்கலாம்.

தற்போது இந்த பிறை வடிவிலான ஏரியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அந்த பகுதிக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். கூகுள் வரைபடத்தில் 24.7874218, 55.3065662 என்ற எண் குறியீடுகளை வைத்து அந்த ஏரி அமைந்துள்ள இடத்தை அறிந்து கொள்ளலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல்
துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து செய்ய நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு
துபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
3. துபாயில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் சாகசம்; “71-வது பிறந்த நாளை கொண்டாடினார்”
துபாயில், ‘ஸ்கை டைவிங்' பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் ஒருவர் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடி சாகசம் புரிந்தார்.
4. துபாயில், உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது
துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது. இது குறித்து அல் பரக்கா பேரீச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்
துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் கண்டுபிடிப்பு வாரம் நேற்று துபாயில் தொடங்கப்பட்டது. இதை ஆணையத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சயீத் முகம்மது அல் தயார் நேற்று தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.