ஜார்ஜ் பிளாய்டு கொலை இப்போது தான் நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம்- இளைய சகோதரர்


Image courtesy : cnn.com
x
Image courtesy : cnn.com
தினத்தந்தி 21 April 2021 5:05 AM GMT (Updated: 21 April 2021 5:05 AM GMT)

ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜார்ஜ் பிளாயிட் வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை விசாரிக்கும் 12  நீதிபதிகள் அடங்கிய குழுவினர், பிளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டனர். பின்னர் 45 சாட்சியங்களிடம் வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிளாயிட் வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து டெரிக்கின் ஜாமீனையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை கடந்த ஆண்டு டெரிக் உள்ளிட்ட சில போலீசார் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஜார்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் பிளாய்ட் கூறியதாவது:

இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜார்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்துவிடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story