சீனாவில் இதுவரை 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்


சீனாவில் இதுவரை 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 21 April 2021 11:52 PM GMT (Updated: 21 April 2021 11:52 PM GMT)

சீனாவில் இதுவரை 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், உள்நாட்டு பரவலை தடுக்க தடுப்பூசி முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தற்போது சீனாவில் அவை பயன்பாட்டில் உள்ளன.

இந்தநிலையில் சீனாவில் இதுவரை 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதை அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.29 சதவீதம் ஆகும்.

சீனாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், இதே வேகத்தில் சென்றால் ஜூன் மாத 15-ந் தேதிக்குள் மொத்த மக்கள் தொகையில் 56 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கை எளிதில் அடைய முடியும் என்றும் மூத்த அரசு மருத்துவர் ஒருவர் கூறினார்.

Next Story