உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம் + "||" + Indonesian navy submarine reported missing with 53 people aboard

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்
இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.
ஜகார்தா,

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர்.

நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

பாலி தீவில் உள்ள கடற்பரப்பில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக இந்தோனேசிய ராணுவ தளபதி ஹடின் டிஜஹ்ஜண்டொ தெரிவித்துள்ளார்.

1,395 டன் எடைகொண்ட மாயமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. மேலும், மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது. 

இதையடுத்து, மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலை தேடுதல் பணிக்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயமாகி 24 மணிநேரத்திற்கும் மேலாகியுள்ளதால் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
இந்தோனேசியாவில் சீன ஆதரவுடன் செயல்பட்டு வரும் மின் ஆலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
2. இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணம்: வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ வெளியீடு
இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் அடைந்த சில வாரங்களுக்கு முன்பு, வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
3. இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்காவும் இணைந்தது
இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்காவும் கைகோர்த்துள்ளது.
4. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.
5. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.