உலக செய்திகள்

53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக இந்தோனேசியா அறிவிப்பு + "||" + Indonesia announces sinking of submarine with 53 sailors

53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக இந்தோனேசியா அறிவிப்பு

53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக இந்தோனேசியா அறிவிப்பு
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.

இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது. 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் கைகோர்த்துள்ளன. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து இந்தோனேசிய கடற்படை இவ்வாறு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ‘‘நீர்மூழ்கி கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் உண்மையான ஆதாரங்கள் மூலம், மாயமான நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்தில் இருந்து கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்துக்கு நாங்கள் சென்று விட்டோம். கப்பலில் 53 பணியாளர்களுக்கான ஆக்சிஜன் சப்ளை இன்று அதிகாலையுடன் முடிந்து விட்டதால், யாரும் உயிர் பிழைத்து இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை’’ என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தோனேசியா அனுமதி
மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தோனேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.
3. இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிப்பு; 53 மாலுமிகளும் பலியான பரிதாபம்
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
4. இந்தோனேசியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் சாவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.