உலக செய்திகள்

தைவான் விவகாரத்தில் தலையீடு: நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை + "||" + Intervention in Taiwan: China warns US not to play with fire

தைவான் விவகாரத்தில் தலையீடு: நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தைவான் விவகாரத்தில் தலையீடு: நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.

குறிப்பாக தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தைவான் விவகாரத்தில் தலையிடுவதை சுட்டிக்காட்டி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறியதாவது:-

தைவான் விவகாரத்தை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு சீனாவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். அமெரிக்கா அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சீனாவின் ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா கட்டாயம் மதிக்க வேண்டும்.அதேபோல் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களை இனப்படுகொலை என கூறும் அமெரிக்காவின் கூற்றை சீனா ஒருபோதும் ஏற்காது. இது அரசியல் நோக்கங்களுக்காக புனையப்பட்ட பெரிய பொய்யாகும்.‌

அதேவேளையில் ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதையும் அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் சீன அரசாங்கத்தின் முயற்சிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும். இப்படி பல்வேறு விவகாரங்களில் சீனா மீது வைத்துள்ள தவறான புரிதல்களை சமாளிக்க அமெரிக்கா இன்னும் சரியான வழியைக் கண்டு பிடிக்காததால் இருநாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் - தொற்று நோய் நிபுணர் கருத்து
டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி கூறியுள்ளார்.
2. சீனாவில் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
3. சீனாவில் 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை
கடந்த 5 நாட்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது.
4. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
5. ‘ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை': டிரம்ப் விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான உச்சி மாநாடு நடந்தது.