மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு


மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2021 9:23 AM GMT (Updated: 26 April 2021 9:23 AM GMT)

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன.

அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து உரிமையாளரின் பிடியிலிருந்து தப்பித்து  ஹோலி  என்ற நாய் ஒன்று  பந்தய டிராக்கில் ஓடியது.

பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவி லானேயை விட ஹோலி  ஒரு வினாடி முந்திச் சென்றது.  அந்த நாய் வெற்றி பெற்றதாக விளையாட்டாக அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசு பெற்ற மாணவி லானே கூறும் போது

"முதலில், இது மற்றொரு ஓட்டப்பந்தய வீரர் என்று நான் நினைத்தேன், எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் நான் நீண்ட தூரம் முன்னிலையில் இருந்தேன் 

"அது நெருங்க நெருங்க, 'இது ஒரு நபராக இருப்பதற்கு சாத்தியம் இல்லைஎ நவும் அது  மிகச் சிறியது' என்று நினைத்தேன், பின்னர் அது ஒரு நாய் என்பதை நான் கவனித்தேன்,"  நான் அதனை எப்படி முந்தமுடியும் என நினைத்தேன்பின்னர் ஒருவாறாக சமாளித்தேன் என கூறினார்.



Next Story