உலக செய்திகள்

சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை காதல் + "||" + Hollywood actress love on luxury cars

சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை காதல்

சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை காதல்
சொகுசு கார்கள் மீது ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தீராத காதல் கொண்டு உள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், 

ஹாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டவர் ஆவார். இந்த படங்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன.

அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி, அன் புரோக்கன், பை தி சீ, பர்ஸ்ட் தே கில்டு மை பாதர் போன்ற படங்களை அவர் இயக்கியும் பெயர் பெற்றிருக்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் தெரியாத ஒரு ரகசியம், அவர் சொகுசு கார்கள் மீது தீராத காதல் கொண்டிருப்பதுதான்.

பி.எம்.டபிள்யு ஹைட்ரஜன் 7, ரேஞ்ச் ரோவர் ரோக், லெக்சஸ் எல்எஸ் 460 எப், ஜாகுவார் எக்ஸ் ஜே, கேடிலேக் எஸ்கலேட் இஎஸ்வி போன்ற சொகுசு கார்களை அவர் வாங்கிக்குவித்து இருக்கிறார். இதுபற்றிய ரகசியங்கள் கசிந்து அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.