உலக செய்திகள்

அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது + "||" + About 10 million people in the United States have been fully vaccinated against coronavirus

அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.‌ கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.

அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்த நாட்டு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதன் பலனாக அங்கு கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதால் திட்டமிட்டதைவிட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அந்தவகையில் அமெரிக்காவில் இதுவரை 10 கோடி பேர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டதாக, அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 30.5 சதவீதமாகும்.

அதேபோல் 10 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமானோர் குறைந்தது கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசை போட்டுக்கொண்டு உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 43.6 சதவீதம் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்

1. தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் பிரபல புகைப்படம் ரூ. 3.5 கோடிக்கு ஏலம்
தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.
3. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
4. கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
5. பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.