உலக செய்திகள்

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி + "||" + Twenty six killed in boat accident in Bangladesh

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி
வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
டாக்கா,

வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.  இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். படகில் அதிக பயணிகள் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 வங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வையடுத்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2. வங்க தேசம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றார்.
3. வங்காளதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தினம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
வங்காளதேச மக்களுக்கு இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 50வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
5. வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.