உலக செய்திகள்

அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி + "||" + Corona for 1,772 people in a single day in the UAE

அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 940 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,772 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 795 ஆக அதிகரித்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,769 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17 ஆயிரத்து 951 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் இதுவரை 4 கோடியே 46 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை தன்னார்வத்துடன் வந்து போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம்; சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் சான்றிதழ் வழங்கியது
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சிறப்பான கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் அங்கீகாரம் அளித்து சான்றிதழை வழங்கியுள்ளது.
2. வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள்; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
4. கொரோனாவை கட்டுப்படுத்த நாளை மறுதினம் முதல் ஒடிசாவில் 14 நாட்கள் பொதுமுடக்கம்
ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுதினம் முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு அடைப்பும் அமலாகிறது.
5. மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்; மராட்டிய அரசு உத்தரவு
மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.