உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் கோவேக்சின் செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்


உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் கோவேக்சின் செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 2:25 AM GMT (Updated: 4 May 2021 2:25 AM GMT)

பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐதராபாத்: 


பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது  கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி  வேகமாக பரவி வரும் இங்கிலாந்தின் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசியூம் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 



Next Story