உலக செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம் + "||" + 13 killed in bus crash in Pakistan

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து,  ஹசன் அப்தல் என்ற இடத்தில் வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பயணிகள் 13 பேர் பலியாகினர். மேலும் 25- பேர் காயம் அடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  காயம் அடைந்தவர்களில் பலரின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2. பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது
பாகிஸ்தான் அறிமுக வீரர் வீசிய அதிவேக பவுன்ஸரில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்தது.
3. 20 ஓவர் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
4. சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் பலி
சீன தூதர் - உயர் மட்ட அதிகாரிகள் தங்கி இருந்த பாகிஸ்தான் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது இதில் 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. பாகிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி
பாகிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.