பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு ஏற்ப தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்பி வைக்கிறோம்; அமெரிக்க அதிபர் பைடன்


பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு ஏற்ப தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்பி வைக்கிறோம்; அமெரிக்க அதிபர் பைடன்
x
தினத்தந்தி 4 May 2021 9:58 PM GMT (Updated: 4 May 2021 9:58 PM GMT)

பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு ஏற்ப தடுப்பூசி மூலப்பொருட்கள், ஆக்சிஜனை அனுப்பி வைக்கிறோம் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.  அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பணிகளில் தீவிரம் செலுத்த தொடங்கினார்.

உலக நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா திகழும் என்றும் அவர் கூறினார்.  எனினும், அமெரிக்காவில் உள்ள வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், பைடன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, வயது வந்த அமெரிக்கர்கள் அனைவருக்கும் வருகிற ஜூலை 4ந்தேதிக்குள் 70% தடுப்பூசியின் ஒரு டோசாவது செலுத்தப்படும்.  16 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் போடப்படும் என கூறியுள்ளார்.

இது மற்றொரு பெரிய இலக்கு.  அமெரிக்காவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான தீவிர நடவடிக்கையாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

நாங்கள் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு உதவி செய்து வருகிறோம்.  இந்திய பிரதமர் மோடியிடம் நான் பேசினேன்.  கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களே வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.  அவற்றை நாங்கள் அனுப்பி வருகிறோம்.  ஆக்சிஜனையும் அனுப்புகிறோம்.  இந்தியாவுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story