உலக செய்திகள்

ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன் + "||" + Biden’s new Covid vaccination goal is for 70% of adults to have at least one shot by July 4

ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்

ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்
ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான். கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ஜூலை 4 ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கர்களில் 70 சதவீதத்தினருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதையும், 16 கோடி அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு உதவி வருவதாக குறிப்பிட்ட ஜே பைடன். பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு தேவையானஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் - தொற்று நோய் நிபுணர் கருத்து
டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி கூறியுள்ளார்.
2. தெலுங்கானா, பஞ்சாப், இமாசல பிரதேச மாநில கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தணியத்தொடங்கியுள்ளது.
3. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்திற்கு கீழ் வந்தது
கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று 1,65,375- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
4. டெல்டா பிளஸ் கொரோனாவால் 3-வது அலைக்கு வாய்ப்பு? நிபுணர்கள் கவலை
மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 22 பேருக்கு டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 134-பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.