டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம்: புதிதாக தகவல் தொடர்பு வலைத்தளத்தை தொடங்கிய டிரம்ப்


டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம்: புதிதாக தகவல் தொடர்பு வலைத்தளத்தை தொடங்கிய டிரம்ப்
x
தினத்தந்தி 5 May 2021 11:05 PM GMT (Updated: 5 May 2021 11:05 PM GMT)

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.‌இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கின.இந்த சூழலில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அதன்படி டிரம்ப் தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டிரம்பின் ஆலோசகர் ஜாசேன் மில்லர் முன்னர் கூறியதுபோல இது ஒரு சமூக வலைத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Next Story