செவ்வாய் கிரகத்தில் பறக்க விட்ட நாசாவின் ஹெலிகாப்டர் எடுத்து அனுப்பிய வீடியோ


செவ்வாய் கிரகத்தில் பறக்க விட்ட நாசாவின் ஹெலிகாப்டர் எடுத்து அனுப்பிய வீடியோ
x
தினத்தந்தி 8 May 2021 12:30 PM GMT (Updated: 8 May 2021 12:30 PM GMT)

செவ்வாய் கிரகத்தில் பறக்க விட்டஹெலிகாப்டர் வீடியோ எடுத்து நாசாவுக்கு அனுப்பி உள்ளது

வாஷிங்டன் 

அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த ரோவர் விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. 

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. மேலும் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும். இதே பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. 

‘இன்ஜெனுயிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

தற்போது  பெர்சவரன்ஸ்  வீடியோ எடுத்து நாசாவுக்கு அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் தளத்தில் ஹெலிகாப்டர் பறக்க முடியுமா என்று இதன்மூலமாக நாசா விஞ்ஞானிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ஹெலிகாப்டர் எழுப்பும் சத்தத்தை ஒலிபெருக்கி பதிவு செய்துள்ளது. இந்த தகவலை நாசா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வேறொரு கிரகத்தில் ஒரு விண்கலம் ஒரு தனி விண்கலத்தின் ஒலிகளைப் பதிவுசெய்தது இதுவே முதல் முறையாகும்



Next Story