கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார், ஹாலிவுட் நடிகை ஜெனிபர்


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார், ஹாலிவுட் நடிகை ஜெனிபர்
x
தினத்தந்தி 8 May 2021 11:35 PM GMT (Updated: 8 May 2021 11:35 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இன்னும் முதல் இடத்தில் தொடர்கிறது.

அங்கு ஹாலிவுட் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.அந்த வகையில் நடிகை ஜெனிபர் அனிஸ்டன், இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக்கொண்டு விட்டார்.இதை நேற்று முன்தினம் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்தப்பதிவில் அவர், “முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டேன். அது நன்றாக இருக்கிறது. அமெரிக்காவில் இப்போது கொரோனா தடுப்பூசியை நாடுவதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அதே நேரத்தில் ஒரு சிலர் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். நம்மில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுகையில் அது நம் அனைவரையும் பாதிக்கிறது” என கூறி உள்ளார்.


Next Story