உலக செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்குள் பிரிட்டன் கொரோனா இல்லாத நாடாக மாறும்: தடுப்பூசி பணிக்குழு தலைவர் + "||" + Britain Free Of Covid By August, Says UK Vaccine Task Force Chief: Report

ஆகஸ்ட் மாதத்திற்குள் பிரிட்டன் கொரோனா இல்லாத நாடாக மாறும்: தடுப்பூசி பணிக்குழு தலைவர்

ஆகஸ்ட் மாதத்திற்குள் பிரிட்டன் கொரோனா இல்லாத நாடாக மாறும்: தடுப்பூசி பணிக்குழு தலைவர்
பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன்,

பிரிட்டனில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது. இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த பிரிட்டன்  தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தியது. 

குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் , கொரோனா தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடத்தப்படுகிறது. பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு  தலைவர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 6.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டனில் தற்போது வரை 5 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைவாக முடிப்பதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா ஆபத்து இல்லாத நாடாகப் பிரிட்டன் மாறும் என கிளைவ் டிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.41 கோடியை தாண்டியுள்ளது.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.37 கோடியை தாண்டியுள்ளது.
5. கொலம்பியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது
கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.