உலக செய்திகள்

எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம் + "||" + PM Modi's Actions "Inexcusable", Government Needs To Own Up Covid Mistakes: Lancet

எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம்

எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவின் மோடி அரசு கொரோனாவை சரிவர கையாளவில்லை என  புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான 'தி லான்செட்'  விமர்சித்துள்ளது. இது தொடர்பாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது.  இந்தியாவில் 21 சதவீதம் பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய செரோ ஆய்வு காட்டியது. 

ஆனாலும் இந்தியா கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தி விட்டது என்ற பிம்பத்தை மத்திய அரசு காட்டியது. அதிவேகமாக பரவக்கூடிய நிகழ்ச்சிகள் (superspreader events) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதும் கூட மத திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளித்தது. 
அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் நடைபெற்றன.  

மார்ச் மாதத்தில் கொரோனா 2-வது அலை ஏற்படும் முன்பாகவே  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்தியா, கொரோனா பெருந்தொற்று  பரவல் முடிவு பெறும் இறுதி கட்டத்தில் (endgame) இருப்பதாக கூறினார். மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது என்பன போன்ற தவறான பரிந்துரைகளால் போதிய தயார்நிலை ஏற்படுத்தப்படவில்லை.   தடுப்பூசி திட்டமும் துரிதமாக நடைபெறவில்லை. மக்கள்தொகையில் 2% க்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அதேபோல் கொரோனா 2-வது அலை பற்றிய  பல எச்சரிக்கைகளை மத்திய அரசு அலட்சியம்  செய்தது”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில பரிந்துரைகளையும் லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. அதில்,  தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து உரிய வேகத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்  நகர்ப்புறத்தில் மட்டுமல்ல, 65% க்கும் அதிகமான மக்கள் (அதற்கு மேற்பட்டவர்கள்) அல்லது 800 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கிராமப்புற மற்றும் ஏழை குடிமக்களிடம் தடுப்பூசி பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் முதலீடு அதிகரிப்பா? மத்திய அரசு மறுப்பு
2020 ம் ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 20 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்து இருப்பதாக செய்தி வெளியானது.
2. மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேகதாது அணையை கட்டும் முடிவை கர்நாடகஅரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.
4. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: மத்திய மந்திரி பியூஸ்கோயல்
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும், என திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறினார்.
5. கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவி: ஆப்கானிஸ்தான் சிறையில் வாடும் கேரள பெண்ணுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவியான தனது மகளுக்கு மன்னிப்பு கொடுத்து, அவரை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை விடுத்து உள்ளார்.