உலக செய்திகள்

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு + "||" + Police: Man kills 6 people, then self, at Colorado birthday party

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில்,  நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.  உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த  தாக்குதலை நடத்தியதுடன், தானும் தற்கொலை செயதிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குழந்தைகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஆதரிக்கிறதா...?
சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷியாவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆதரிப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
3. அமெரிக்காவில் 31.1 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்கா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து
அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.