அமெரிக்காவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் - மூத்த தொற்று நோய் நிபுணர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2021 10:20 PM GMT (Updated: 10 May 2021 10:20 PM GMT)

அமெரிக்காவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டின் மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறும் நிலையில், உண்மையான பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என அமெரிக்காவின் மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தற்போது உலகின் கொடூரமான கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்கா கணக்கிட்டுள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். இது சரியாக கணக்கீடு என்று நான் நினைத்ததை விட சற்று அதிகம், உங்களுக்கு நன்றாக தெரியும், நாம் ஒரு வரலாற்று தொற்றுநோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இது போன்றதொரு நோயினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கண்டதில்லை” என்று அந்தோணி பாசி கூறினார். 

திங்கள்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 5,81,752 ஆக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,04,114 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story