உலக செய்திகள்

ரஷியா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு குழந்தைகள் - ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பலி + "||" + 11 killed in Russian school shooting, one gunman held

ரஷியா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு குழந்தைகள் - ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பலி

ரஷியா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு குழந்தைகள் - ஆசிரியர்கள் உள்பட  11 பேர் பலி
ரஷியாவில் உள்ள கசான் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ

ரஷியாவின் மாஸ்கோவிற்கு கிழக்கே 820 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது டார்டாரஸ்தான் குடியரசு   இங்குள்ள நகரான கசானில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மர்ம மனித மனித கண்மூடிதனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் குழந்தைகளும், ஆசிரியர்க்ளும் அலறி அடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள்  4 ஆசிரிர்கள் பலியானார்கள்.

இறப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் மாறுபடுகின்றன் ஆனால் அதிகாரிகள் குறைந்தது ஏழு குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கசானில் உள்ள அனைத்து பள்ளிகளும் மே 12 ஆம் தேதி மூடப்படும் என்று டார்டாரஸ்தான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

டார்டாரஸ்தான்  ஜனாதிபதி ருஸ்தம் மின்னிகனோவ் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பதிலளித்த ரஷிய அதிபர் ஜனாதிபதி விளாடிமர் புதின் கூறும் போது  ரஷ்யாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களை மறுஆய்வு செய்யப்போவதாக  கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - ரஷிய தூதர் தகவல்
ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலாய் குடஷேவ் தெரிவித்தார்
2. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை ‘டோஸ்’ நல்ல பலன் தருகிறது - ஆய்வுத்தகவல்
ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுத்தகவல் கூறுகின்றன.
3. ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
4. ரஷியாவில் 28 பேருடன் மாயமான விமானம் மலையில் மோதி நொறுங்கியது; 19 உடல்கள் மீட்பு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ‘ஆன்டனோவ் ஆன்-26' ரக பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பலானா நகர மேயர் ஓல்கா மொகிரோ உள்பட 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனா்.
5. ரஷியாவில் 28 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மாயம்
ரஷியாவில் 28 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானது.