போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்திற்கு 2 ஆண்டுகளாக சுமார் 9,000 முறை போன் செய்த நபர் கைது


போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்திற்கு 2 ஆண்டுகளாக சுமார் 9,000 முறை போன் செய்த நபர் கைது
x
தினத்தந்தி 13 May 2021 1:27 AM GMT (Updated: 13 May 2021 1:27 AM GMT)

போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளை பேசி அவமரியாதை செய்வதற்காக சுமார் 9,000 முறை போன் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் ஒவிடோ நகரை சேர்ந்த 49 வயது நிரம்பிய நபருக்கு கடந்த 2019 ஆண்டு முதல் போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்திற்கு தொடர்ச்சியால போன் செய்து வந்துள்ளார்.

அந்த நபருக்கு எந்த வித அவசர உதவியும் தேவைப்படாத நிலையிலும் சேவை மையத்தில் பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்றி, அவமரியாதை செய்ய வேண்டும் என்ற ஒன்றை காரணத்திற்காக அவர் தொடர்ந்து 2019ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக போன் செய்துள்ளார்.

அந்த நபர் ஸ்பெயின் அரசின் போலீஸ் மற்றும் அவசர சேவை மையங்களுக்கு சுமார் 9 ஆயிரம் முறை போன் செய்துள்ளார். அவற்றில் போலீஸ் உதவி மைய எண்ணான 091 என்ற எண்ணுக்கு 3,789 முறையும், அவசர சேவை மைய எண்ணான 112-க்கு 4,957 முறையும் என மொத்தம் 8 ஆயிரத்து 746 முறை போன் செய்துள்ளார்.

எந்த உதவியும் தேவைப்படாத நிலையில் இவ்வாறு போன் செய்ய வேண்டாம் என்று உதவி மையத்தில் பணி புரியும் நபர்கள் தெரிவித்த போதும் அவர் தொடர்ந்து போன் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, 091 போலீஸ் உதவி மையம் அந்த நபர் குறித்து போலீசில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 2 ஆண்டுகளாக தேவையின்றி அவசர சேவை மையம் மற்றும் போலீஸ் உதவி மையத்திற்கு போன் செய்து தொல்லை கொடுத்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேவையில்லாமல் அவசர உதவி மையத்திற்கு 2 ஆண்டுகள் போன் செய்து தொல்லை கொடுத்ததாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகும் பட்சத்தில் 3 மாதம் முதல் 1 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.         

Next Story