உலக செய்திகள்

சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்தார்... + "||" + Myanmar beauty queen takes up arms against military coup in her Country

சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்தார்...

சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்தார்...
சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளார்.
நைபிடா,

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவில் பலரும் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அழகி போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்ற பெண் மியான்மர் ராணுவத்திற்கு எதிரான சண்டையில் கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்துள்ளார்.

மியான்மர் நாட்டை சேர்ந்தவர் ஹடர் ஹட்டி ஹட்டி. இவர் 2013 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்றார். சர்வதேச அழகி போட்டியில் அவர் இறுதி சுற்றுக்கு தேர்வு ஆகவில்லை ஆனால், மியான்மர் நாட்டின் சார்பில் ஹடர் ஹட்டி ஹட்டி பங்கேற்றார். தற்போது 32 வயதான ஹடர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

ஆனால், அவர் தற்போது மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார். மியான்மரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணத்தில் வாழ்ந்துவரும் இன ஆயுத குழுக்களுடன் இணைந்து ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கியுள்ளார். 

ஹடர் ஹட்டி ஹட்டி தனது கையில் நவீன ரக துப்பாக்கியுடன் காட்டுப்பகுதியில் நிற்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், என்னால் முடிந்த வரை நான் போராடுவேன். அனைத்தையும் இழக்க நான் தயாராக உள்ளேன். எனது உயிரையும் கொடுக்க நான் தயாராகிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
2. ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு
மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறினார்.
3. மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.
4. ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சாங் சூகி
மியான்மர் பிரதமர் ஆங் சாங் சூகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்முறையாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
5. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் ஆனார்.