இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத் அமைப்பின் தளபதி பலி


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத் அமைப்பின் தளபதி பலி
x
தினத்தந்தி 18 May 2021 9:38 AM GMT (Updated: 18 May 2021 9:38 AM GMT)

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஜிகாத் அமைப்பின் தளபதி உயிரிழந்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். 

காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 212 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாதி அமைப்பின் தளபதி ஹசம் அபு ஹர்பீட் கொல்லப்பட்டுள்ளார். இந்த ஜிகாதி அமைப்பு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஜிகாதி அமைப்பின் தளபதி கொல்லப்பட்டத்தையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த குழுக்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.   

Next Story