அமெரிக்க இராணுவ ஆதரவை இஸ்ரேல் கோரவில்லை: ராணுவ செய்தி தொடர்பாளர்


அமெரிக்க இராணுவ ஆதரவை இஸ்ரேல் கோரவில்லை: ராணுவ செய்தி தொடர்பாளர்
x
தினத்தந்தி 19 May 2021 12:55 AM GMT (Updated: 19 May 2021 12:55 AM GMT)

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.

வாஷிங்டன்,

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் என இடைவிடாமல் சண்டை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன.  காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் உள்பட 212 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா வெளிப்படுத்தி வருகிறது.  இந்த பிரச்சினைக்கு மத்தியில்  இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில்,  காசாவுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவின் ராணுவ உதவியை இஸ்ரேல் கோரவில்லை என்று அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். 

ஜான் கிர்பி கூறுகையில், “ அவர்கள்(இஸ்ரேல்) கூடுதலாக எந்த ஆதரவையும் கோரவில்லை.  தற்பாதுகாப்புக்கு இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான இருதரப்பு ராணுவ உறவு இருப்பது உங்களுக்கு தெரியும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். 


Next Story