ஜப்பானில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல்


ஜப்பானில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 21 May 2021 5:29 PM GMT (Updated: 21 May 2021 5:29 PM GMT)

ஜப்பானில் ஆஸ்ட்ரஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகளுக்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.‌

டோக்கியோ,

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து தான் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அதனைதொடர்ந்து இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த 16-ந்தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஜப்பான் அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அங்குள்ள மக்களுக்கு போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜப்பானில் ஏற்கனவே அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகளுக்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.‌

Next Story