உலக செய்திகள்

பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி + "||" + Pakistan blast kills six, wounds 13 at pro-Palestinian rally

பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
காபுல்,

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமின் அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர்.

11 நாட்களாக நடைபெற்றுவந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டை நேற்று நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்கு கரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும்( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.

அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்றன. குறிப்பாக, அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் ஷாமேன் என்ற நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். 

பேரணி போஹ்ரா சவுக் என்ற இடத்தில் உள்ள இறைச்சிக்கடை சந்தைபகுதி அருகே வந்தபோது அங்கு வெடிகுண்டுகளுடன் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்டவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.
2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
3. பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை
ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்
4. பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
5. பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்-லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியானார்கள்.