தனிநபர் வருமானம்: இந்தியாவை முந்திய வங்காளதேசம்


PTI (file Photo)
x
PTI (file Photo)
தினத்தந்தி 22 May 2021 8:05 AM GMT (Updated: 22 May 2021 8:05 AM GMT)

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

டாக்கா,

இந்தியாவின் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கரணமாக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான  வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.  இதன் பலனாக தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் விஞ்சியுள்ளது. 

கடந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2,227 டாலராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம் 280 டாலர் அளவுக்கு குறைந்து 1,947 டாலராக இருக்கிறது. கடந்த  நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,064 டாலராக இருந்தது. ஒரு நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.


Next Story