ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதா சட்டம் அமல் - ஜோ பைடன்


ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதா சட்டம் அமல் - ஜோ பைடன்
x
தினத்தந்தி 22 May 2021 2:11 PM GMT (Updated: 22 May 2021 2:11 PM GMT)

ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதை அடுத்து அந்த மசோதா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பெண்கள் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.  இதைத் தொடர்ந்து, ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன.

இந்தநிலையில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் வகையில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

'இந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டுள்ளதன் மூலம், அமெரிக்கா முழுவதும் வெறுப்பு குற்றங்களைப் பதிவு செய்ய தனிப் பிரிவுகளும், உதவி தொலைபேசி எண்களும் தொடங்கப்படும். தாக்குதல் சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தச் சட்டம் அமெரிக்கர்களின் மனதையும், மூளையையும் மாற்ற உதவும். அமெரிக்காவில் இன வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை. இதை எனது அடிமனதில் இருந்து தெரிவிக்கிறேன்' என்றார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு இரு கட்சிகளிடமிருந்தும் பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story