உலக செய்திகள்

பாகிஸ்தான்: 12 இந்திய தூதரக அதிகாரிகள் - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று + "||" + Pakistan asks 12 Indian High Commission officials and families to quarantine after positive case in embassy

பாகிஸ்தான்: 12 இந்திய தூதரக அதிகாரிகள் - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான்: 12 இந்திய தூதரக அதிகாரிகள் - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத்

12 இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழு சனிக்கிழமை (மே 22) வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றது. அவர்களுக்கு  பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனை செய்யபட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைபடுத்தப்ப்ட்டு உள்ளனர். 

இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்க்கான பாகிஸ்தானின் உயர்மட்ட அமைப்பு,  மற்றும் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) 12 அதிகாரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியது. தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  இந்திய  தூதரக் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூயார்க் நகரில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் கட்டாயம்
அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயார்க்கில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.
2. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.
4. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
5. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.