மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்


மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக  ஆஜர்
x
தினத்தந்தி 24 May 2021 8:54 AM GMT (Updated: 24 May 2021 8:54 AM GMT)

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் ஆனார்.

நேப்பிதாவ்,

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம். ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து போராடும் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. 

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரடியாக ஆஜர் ஆனார்.  ஆங் சான் சூகியை அவரது வழக்கறிஞர்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங் சான் சூகி நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக சந்தித்துப் பேசிய  வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

Next Story