மலேசியாவில் கோர விபத்து; 2 மெட்ரோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; 200 பேர் படுகாயம்


மலேசியாவில் கோர விபத்து; 2 மெட்ரோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; 200 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 May 2021 6:53 PM GMT (Updated: 25 May 2021 6:53 PM GMT)

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய இரட்டை கோபுரமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்துக்கு அருகே உள்ள மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதையில் நேற்று முன்தினம் இரவு மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சென்று கொண்டிருந்தது.‌

டிரைவர் இல்லாமல் முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இந்த ரெயிலில் 213 பயணிகள் இருந்தனர்.அப்போது அதே வழித்தடத்தில் சோதனை ஓட்டத்துக்காக காலி பெட்டிகளுடன் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் டிரைவர் இருந்தார்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதியது.இந்த கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.‌இந்த விபத்து காரணமாக அந்த சுரங்க பாதையில் பல மணி நேரத்துக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலேசியாவின் 23 ஆண்டு கால மெட்ரோ ரெயில் சேவையில் நடந்த முதல் மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு அந்த நாட்டின் அதிபர் முகைதின் யாசின் உத்தரவிட்டுள்ளார்.

 


Next Story