உலக செய்திகள்

ரஷ்யாவில் புதிதாக 9,694 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 355 பேர் பலி + "||" + Corona affects 9,694 new people in Russia: another 355 killed

ரஷ்யாவில் புதிதாக 9,694 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 355 பேர் பலி

ரஷ்யாவில் புதிதாக 9,694 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 355 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 50.63 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.08 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 35.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 50,63,442 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 355 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 46,77,870 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,64,410 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் புதிதாக 14,723 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 357 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 52.08 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 399 பேர் பலி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.56 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பு மருந்தை வாங்க பேச்சுவார்த்தை: மும்பை மாநகராட்சி
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,500 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 50.81 லட்சத்தைக் கடந்துள்ளது.