உலக செய்திகள்

அமெரிக்காவில் கோர விபத்து; ஏரியில் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் சாவு + "||" + Accident in the United States; 7 killed in plane crash in lake

அமெரிக்காவில் கோர விபத்து; ஏரியில் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் சாவு

அமெரிக்காவில் கோர விபத்து; ஏரியில் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் சாவு
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரதர்போர்ட் நகரை சேர்ந்த மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கியது.

பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் ஏரியில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. மற்ற 6 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘ரஷியாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை': டிரம்ப் விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான உச்சி மாநாடு நடந்தது.
2. அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்
அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.
4. இந்தியாவுக்கு 8 கோடி தடுப்பூசியில் ஒரு பங்கு கோவேக்ஸ் திட்டத்தின்மூலம் அமெரிக்கா வழங்குகிறது
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை எதிர்த்துப்போரிட்டு வருகிற இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
5. அமெரிக்க ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்; ஜோ பைடன், ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் முதன்முதலாக ஜோ பைடன் இங்கிலாந்து சென்றார். ரஷியா தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுப்போம் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.