உலக செய்திகள்

இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல் + "||" + Night curfew imposed in South Africa from today

இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்

இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் 2வது அலை சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.65 மில்லியனாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 9,60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் சிரில் ரமாஃபோசா தெரிவித்துள்ளார். இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் 3வது அலை தொடக்கம் - சுகாதாரத்துறை தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2. தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் இன்று தொடங்குகிறது.
3. ஊரடங்கால் வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் தீவிரமாக கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட வேட்டைக்காரர்கள் - ஒருவர் பலி
யானைகளை வேட்டையாட சென்ற வேட்டைக்காரர்கள் யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.