உலக செய்திகள்

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு + "||" + Oscar Awards 2022 Ceremony will take place on March 27th

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 93-வது ஆஸ்கர் விருதுகள் - சிறந்த திரைப்படம் ’நோமெட்லெண்ட்’, சிறந்த நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ்
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
2. 93-வது ஆஸ்கர் விருதுகள் - சிறந்த இயக்குனர் விருதை தட்டிச்சென்ற சீன பெண் இயக்குனர் குளோயி சாவ்
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.