உலக செய்திகள்

சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத் துறை + "||" + Covid-19 has no ‘credible natural ancestor’, created in Wuhan lab, new study claims

சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத் துறை

சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -பிரிட்டிஷ் உளவுத் துறை
சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லண்டன்

2019ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் உகான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நீடிக்கும் சூழலில் உலகெங்கும் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், உகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ், சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

தி சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரானா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் மூலதாரம் குறித்து முதலில் இது போன்ற செய்திகள் வெளியானாலும், அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள்; போலீசார் வழக்குப்பதிவு
மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
2. உத்தரகாண்ட்: 2 டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் 90% போலீசாருக்கு கொரோனா பாதிப்பு -அதிர்ச்சி தகவல்
உத்தரகாண்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 90 சதவீத போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
3. தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாது... பாதுகாப்பு கேட்கும் சீரம் நிறுவனம்?
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் சட்டரீதியான பாதுகாப்பைக் கோரிய உள்ளது.
4. மாவட்ட அளவிலான பாதிப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு - நிபுணர் குழு பரிந்துரை
மாவட்ட அளவிலான பாதிப்பு அடிப்படையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு - நிபுணர் குழு பரிந்துரை
5. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பீர் இலவசம் கவர்ச்சிகர திட்டம்
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.