உலக செய்திகள்

சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியது + "||" + The number of vaccine doses given in China is close to 64 crore

சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியது

சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியது
சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கி உள்ளது.
பீஜிங், 

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அங்கு சினோபார்ம் நிறுவனத்தின் 2 தடுப்பூசிகள், சினோவேக், கான்சினோ என 4 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாக சுவாச நோய்க்கான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஜாங் நன்ஷன் சமீபத்தில் கூறியிருந்தார்.

அந்த வகையில் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 63 கோடியே 91 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.

இப்படி மொத்த எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியிருந்தாலும், எவ்வளவு பேர் 2 டோஸ்களும் போட்டுள்ளனர்?, எத்தனை பேர் முதல் டோஸ் மட்டும் போட்டிருகின்றனர்? என்ற விவரத்தை சீன அரசு வெளியிடவில்லை

தொடர்புடைய செய்திகள்

1. இன்று வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம்
நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
2. அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்
அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு
தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கு டிரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
4. திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி போட 2-வது நாளாக திரண்ட பொதுமக்கள்
திருத்துறைப்பூண்டியில் ெகாரோனா தடுப்பூசி ேபாட 2-வது நாளாக பொதுமக்கள் திரண்டனர். 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
5. கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து சாவு
கும்பகோணத்தில், கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார்.