சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்


சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
x
தினத்தந்தி 1 Jun 2021 4:50 PM GMT (Updated: 1 Jun 2021 5:04 PM GMT)

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெறும்  சீனாவின்  2-வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. 

சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம், உலக நாடுகள், இந்த தடுப்பூசிக்கு  விரைவாக ஒப்புதல் அளிக்கவும் த இறக்குமதி செய்து விநியோகிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அதேபோல், கோவேக்ஸ் தடுப்பூசி திட்டம் மூலம் இந்த தடுப்பூசியை இனி ஏழை நாடுகளுக்கு வழங்க முடியும்.  சினோவேக் தடுப்பூசியை ஏற்கனவே, சீனாவை தவிர்த்து பிரேசில், சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்பாட்டில் வைத்துள்ளன. 

பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ரா ஜெனாகா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே  உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

Next Story