உலக செய்திகள்

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய ‘பாக்வேக்’ தடுப்பூசி விநியோகம் தொடக்கம் + "||" + Launch of Pakvac vaccine of Pakistan developed with Chinese assistance

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய ‘பாக்வேக்’ தடுப்பூசி விநியோகம் தொடக்கம்

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய ‘பாக்வேக்’ தடுப்பூசி விநியோகம் தொடக்கம்
சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான், முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி உள்ளது. சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இவை பிரித்தெடுக்கப்பட்டு தடுப்பூசிகளாக தயாரிக்கப்பட்டன. இதன் பின்னர் நடந்த ஆய்வக சோதனைகளுக்குப் பின், 18 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில், இதன் செயல்திறன் 74.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து ‘பாக்வேக்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் விநியோகம் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் ‘பாக்வேக்’ தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர்.பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை சீனா வழங்கியிருந்தாலும், அதனை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது மிகவும் சவாலான பணி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக்கிற்கு தடை விதிப்பு
கோர்ட்டு உத்தரவின்படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.
2. தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் 27 வயது மகள் சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
3. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை; மருத்துவமனையில் அனுமதி
ஆப்கானிஸ்தான் அரசு இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளது.
4. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
5. டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கை நிராகரிக்க முடியாது-ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி
ஜம்மு விமானப் படை நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.