டோக்கியோ ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வீரர்களுக்காக அனுப்பப்படும் மனநல ஆலோசகர்கள் குழு


டோக்கியோ ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வீரர்களுக்காக அனுப்பப்படும் மனநல ஆலோசகர்கள் குழு
x
தினத்தந்தி 4 Jun 2021 7:57 AM GMT (Updated: 4 Jun 2021 7:57 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து வீரர்களுக்காக மனநல ஆலோசகர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து சார்பில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்காக டோக்கியோவிற்கு மனநல ஆலோசகர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 10 மனநல ஆலோகர்கள், ஒரு விளையாட்டு உளவியலாளர் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் இருப்பார்கள் என்றும் இங்கிலாந்து அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களின் மனநலம் நல்ல நிலையில் இருப்பது மிகவும் அவசியம் என்பதாலும், தற்போது கொரோனா சூழலில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த குழு செயல்படும் என்று பிரிட்டிஷ் ஆர்த்தோபிடிக் அசோசியேஷன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story