வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்: ரஷிய அதிபர் புதின் நம்பிக்கை


வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்: ரஷிய அதிபர் புதின் நம்பிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2021 4:46 PM GMT (Updated: 5 Jun 2021 4:46 PM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது.

இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்கா ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உரசல் போக்கு நீடித்து வருகிறது. இந்தநிலையில் வடகொரியாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் ரஷியாவின் அதிபர் புதின் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதின் கூறுகையில், ‘‘ரஷியா உட்பட, அனைத்து நாடுகளும் வடகொரியா பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்’’ என கூறினார்.

 


Next Story