தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுற்றுலா வரலாம்: பிரான்ஸ் அழைப்பு


தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுற்றுலா வரலாம்: பிரான்ஸ் அழைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 3:01 AM GMT (Updated: 6 Jun 2021 3:01 AM GMT)

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பாரிஸ்,

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.  இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
 
நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளா்த்தப்படுகிறது. இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்படுவாா்கள். சுற்றுலா வருவாயை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தளா்த்தப்பட்ட விதிமுறைகள் வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும், புதிய வகை கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பிரான்சுக்கு சுற்றுலா வந்தால் அவா்கள் தனிமைப்படுத்தப்படமாட்டாா்கள். சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இரண்டையும் வைத்திருக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story