உலக செய்திகள்

கொரோனா விவாகரம்: சீனாவை கட்டாயபடுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம் + "||" + World Health Organization (WHO) official said that the WHO can't compel China to divulge more data on COVID-19's origins

கொரோனா விவாகரம்: சீனாவை கட்டாயபடுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா விவாகரம்: சீனாவை கட்டாயபடுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம்
கொரோனா விவகாரத்தில் சீனாவை கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.

உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், கொரோனா வைரசை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து கொரோன தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட உலக சுகாதார நிறுவனம் சீனாவை கட்டாயப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் "அடுத்த நிலைக்கு" எங்கு தோன்றியது என்பதைப் அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை  உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என்றார்.